முள்ளிவாய்க்கால் கஞ்சி அருந்திய காவல்துறையினர்..!யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று (10) கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன் (ஏ9 வீதியில்) ஆரம்பிக்கப்பட்டது.

தமிழர் தாயகம் எங்கும் பயணித்து முள்ளிவாய்க்கால் கஞ்சியினை எமது உறவுகளுடன் பரிமாறி எமது இனம் இனவழிப்புக்கு உள்ளான வரலாற்றினையும், வலிகளையும் எமது இளைய தலைமுறையினருக்கு கடத்தும் செயற்பாட்டினை யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துள்ளனர்.

இன் நிகழ்வில் போக்குவரத்து காவல்துறை உத்தியோகத்தர்களும் முள்ளிவாய்க்கால் கஞ்சி அருந்தி சென்றமை குறிப்பிடத்தக்கது.