இலங்கை கிரிக்கெட் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்த கோப் குழு

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரிகள் கோப் குழுவிற்கு இன்று (14) பிற்பகல் 2 மணியளவில் அழைக்கப்பட்டுள்ளதாக கோப் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார்.

இரண்டு விசேட அறிக்கைகள் மற்றும் இதற்கு முன்னர் கோப் குழு விசாரணைகளின் போது முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காவே இவ் அழைப்பு விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுனில் ஹந்துன்நெத்தி தலைமையிலான கோப் குழுவும் ஷரித்த ஹேரத் தலைமையிலான கோப் குழுவும் இதற்கு முன்னர் சிறிலங்கா கிரிக்கெட் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தது.

இதன் காரணமாக இன்றைய கலந்துரையாடலுக்கு கணக்காய்வாளர் நாயகம் முன்வைக்கவுள்ள அறிக்கையில், முன்னர் சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளும் உள்ளடக்கப்படலாம் என கோப் குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.