இலங்கை தொழிலதிபர் 390 கோடி ரூபா மோசடி - தெற்காசியாவின் மிகப்பெரிய வரி மோசடி என தகவல் : நீதிமன்றம் அதிரடி தீர்மானம்


தெற்காசியாவின் மிகப்பெரிய வரி மோசடியாகக் கருதப்படும் 390 கோடி ரூபா வற் வரி மோசடியைச் செய்ததற்காக பிரதிவாதியான தொழிலதிபர் ஒருவருக்கு 20 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதித்து கொழும்பு மேல் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பை அங்கீகரித்து மேன்மூறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (11) உறுதி செய்தது.

தண்டனை பெற்ற பிரதிவாதியான மொஹமட் குதுப்தீன் தாக்கல் செய்த மேல்மு றையீட்டு மனுவுக்கு எதிராக சட்டமா அதிபர் அண்மையில் தாக்கல் செய்த மனு தொடர்பில் தீர்ப்பு வழங்கி உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (11) இந்த உத்தரவை பிறப்பித்தது.

அர்ஜுன ஒபேசேகர மற்றும் சோபித ராஜகருணா ஆகிய நீதியரசர்களின் இணக்கத்துடன் உயர் நீதிமன்ற நீதியரசர் ஜனக் டி சில்வாஇந்த தீர்ப்பை வழங்கினார்.

தெற்காசியாவின் மிகப்பெரிய வரி மோசடியாகக் கருதப்படும் இந்த வழக்கில், 2002 நவம்பர் 15, முதல் 2004 டிசம்பர் 15, வரைஉள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறவிட வேண்டிய 3.9 பில்லியன் வற் வரிபணத்தை மோசடி செய்ததற்காக மூன்று குற்றவாளிகளுக்கு 20 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதித்தது கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்ட மூன்று பிரதிவாதிகளும் நீதிமன்றத்தை புறக்கணித்து தப்பிச் சென்று, பின்னர் மேன்முறை யீட்டு நீதிமன்றத்தில் தண்டனைக்கு எதிராகமேல்முறையீடு செய்த போதும், மேன்மு றையீட்டு நீதிமன்றம் அவற்றை நிராகரித்துமேல் நீதிமன்றம் விதித்த தண்டனையை உறுதி செய்தது.