தலவத்துகொட பகுதியில் இரவு களியாட்ட விடுதி ஒன்றுக்கு முன்பாக இன்று (19) அதிகாலை துப்பாக்கிச் சூடு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இரவு களியாட்ட விடுதிக்குச் சென்றிருந்த இரு குழுக்களிடையே ஏற்பட்ட வாக்குவாதம் அதிகரித்ததை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த மற்றொரு நபர் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், அனுமதிப்பத்திரம் பெற்ற ரிவால்வர் ரக துப்பாக்கியுடன் வந்த சம்பந்தப்பட்ட நபர், எதிர் தரப்பினரை மிரட்டுவதற்காக சுவரொன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டு இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
சம்பவம் குறித்து தலங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேநேரம் தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் ஒருவரை குறிவைத்து நேற்று காலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மோட்டார் சைக்களில் பிரவேசித்த இனந்தெரியாத இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுச் தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.