தேசிய பாதுகாப்பை உறுதிப் படுத்துமாறு பாதுகாப்பு துறையினருக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் தலைமையில் இன்றையதினம் இடம்பெற்ற பாதுகாப்பு சபையின் கூட்டத்தின் போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வேட்பாளர்களின் பாதுகாப்பு மற்றும் வாக்குச் சாவடிகள், வாக்கு எண்ணும் மத்திய நிலையங்களின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று பாதுகாப்பு தரப்பினரிடம் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பொது மக்களின் அன்றாட செயல்பாடுகளை வழமைபோன்று முன்னெடுத்துச் செல்வதை உறுதிப்படுத்துமாறும் இந்தக் கூட்டத்தில் பாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.