ரஷ்யாவுடனான இந்தியாவின் வணிகத்தை கண்டித்து வரியை அதிகரித்துள்ள அமெரிக்கா, ரகசியமாக ரஷ்யாவிடம் டீல் பேசியது அம்பலமாகியுள்ளது.
ரஷ்யா - உக்ரேன் இடையே போர் நடந்து வரும் நிலையில் போரை நிறுத்தி அமைதி பேச்சுவார்த்தை மேற்கொள்ள அமெரிக்கா முயன்று வருகிறது.
முன்னதாக உக்ரேன் மீது ரஷ்யா போர் தொடர்ந்ததற்காக ரஷ்யாவிற்கு பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டன.
அதை மீறியும் இந்தியா ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கி வருவதாகவும், உக்ரேன் போருக்கு இந்தியாவின் வணிகமே காரணம் என்றும் தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இந்தியா மீது ஏற்கனவே விதித்த 25 சதவீத வரியுடன் மேலும் 25 சதவீத வரியை விதித்தார்.
நட்பு நாடான இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள இந்த வரி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையிலேயே ரஷ்யாவுடன் அமெரிக்கா இரகசிய வணிக ஒப்பந்தம் ஒன்றை முன்னெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அண்மையில் உக்ரேன் போர் நிறுத்தம் குறித்து அலாஸ்காவில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி புடின் ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது ரஷ்யாவுடன் எரிசக்தி ஒப்பந்தம், பணி பாலங்களை உடைக்கும் ஐஸ் ப்ரேக்கர் கப்பல்களை வாங்குவது உள்ளிட்ட சில வணிக பேச்சுவார்த்தைகளை அமெரிக்கா மேற்கொண்டது அம்பலமாகியுள்ளது.