போதை மருந்து கொடுத்து பாலியல் வன்புணர்வு..! பாடசாலை மாணவிக்கு நேர்ந்த பரிதாபம்


மட்டக்களப்பில் பாடசாலை மாணவிக்கு போதை மருத்து கொடுத்து வன்புணர்விற்குட்படுத்திய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் இருவரை சம்பவம் தொடர்பில் கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பாடசாலை மாணவிக்கு போதைப்பொருளை வழங்கி, பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மாணவியின் காதலன் என குறிப்பிடும் ஒருவரும் அவரின் நண்பரும் இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.