சவுதி அரேபிய வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை!

சவுதி அரேபிய வெளிவிவகார அமைச்சர் ஃபைஸல் பின் ஃபர்ஹான் நாட்டை வந்தடைந்துள்ளார்.அவர் ஒருநாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இன்று(திங்கட்கிழமை) அதிகாலை 1.20 மணியளவில் நாட்டினை வந்தடைந்துள்ளார்.அவருடன் வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரிகள் 18 பேர் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.