உக்ரைனின் மீது நாலாபுறமும் ரஷ்யா நடத்தியுள்ள மோசமான ஏவுகணைத் தாக்குதல்கள்!

உக்ரைன் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்பு ஓராண்டுகள் கடந்தும் முடிவில்லாமல் நீடித்துக்கொண்டிருக்கின்றது.

இந்தநிலையில், ரஷ்யாவின் தாக்குதல்களால் உக்ரைனின் கட்டிடங்கள் மற்றும் கட்டமைப்புக்கள் என பல பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்று அதிகாலை உக்ரைனின் மின்சக்தி உள்கட்டமைப்புக்களை இலக்குவைத்து ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

வடக்கில் கார்கிவ் நகரம், தெற்கே ஒடேசா, மேற்கில் ஜைட்டோமிர் நகரம் என ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

குறித்த தாக்குதல்களால் கட்டிடங்கள், மின்கட்டமைப்புக்கள் என அனைத்தும் முற்றாக சேதமடைந்துள்ளது.

மேற்கு உக்ரைனில் உள்ள லிவிவ் நகரில் ஒரு வீட்டின் மீது ஏவுகணை விழுந்ததில் 5 பேர் பலியாகியுள்ளனர்.

இதேவேளை, கீவ் நகரில் தொடர்ந்தும் பதற்றமான நிலை நீடித்து வருவதாகவும் சொல்லப்படுகின்றது, அங்கு ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் மேற்கொள்ளப்படும் தாக்குதல் முயற்சிகள் பலவற்றை உக்ரைன் முறியடித்து வருவதாகவும் கூறப்படுகின்றது.

அதேசமயம், ரஷ்யாவின் 34 ஏவுகணைகளையும், ஈரான் வழங்கியுள்ள ஷாகித் டிரோன்கள் 4-ஐயும் இடைமறித்து தாக்கியுள்ளதாக உக்ரைனிய படைகள் தெரிவித்துள்ளன.