யாழில் வீடுடைத்து நகை, பணம் திருட்டு..! வவுனியாவைச் சேர்ந்த 27 வயது நபர் கைது |யாழ்ப்பாணம் கோண்டாவிலில் வீடொன்றை உடைத்து நகை, பணம் மற்றும் அலைபேசியைத் திருடிய ஒருவர் கோப்பாய் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று உரும்பிராய் பகுதியில் வைத்து வவுனியாவைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபரிடமிருந்து 21/2 தங்கப் பவுண் சங்கிலி, 20 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான அலைபேசி என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

ஓகஸ்ட் 25ஆம் திகதி கோண்டாவில் பகுதியில் உள்ள வீடொன்றை உடைத்து திருட்டு இடம்பெற்றமை தொடர்பில் வீட்டில் வசிப்பவரினால் கோப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.