ரணில் விக்கிரமசிங்கவின் முக்கிய அதிகாரி அதிரடியாக கைது : துப்பாக்கி சூட்டுடன் தொடர்பா..?



முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பொது மக்கள் தொடர்பாடல் பணிப்பாளராக கடமையாற்றிய கடமையாற்றிய துஷித்த ஹல்லொலுவ இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மே 17 ஆம் திகதி இரவு நாரஹேன்பிட்டி, சுற்று வட்டப் பாதையில் பிரபல தனியார் வைத்தி யசாலைக்கு அருகே வைத்து துஷித்த ஹல் லொலுவ பயணித்த ஜீப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்திருந்தது.

ஹல்லொலுவவும் அவரது சட்டத்தரணி தினேஷ் தொடங்கொடவும் அப்போது அந்த ஜீப்பில் பயணம் செய்து கொண்டிருந்ததாக பொலிஸார் கூறினர்.

சட்ட விவகாரம் ஒன்று தொடர்பில், ஹல்லொலுவ சட்டத்த ரணியை சந்தித்துவிட்டு, அவருடன் வாகனத்தில் பயணிக்கும் போது சம்பவத்துக்கு முகம்கொடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் ஜீப்பை இடை மறித்து நிறுத்தி, கதவுகளைத் திறந்து, துப்பாக்கிச் சூடு நடத்தி, தங்களை மிரட்டியதாக சம்பவத்துக்கு முகம்கொடுத்த ஹல்லொலுவவும் அவரது சட்டத்தரணியும் பொலிஸாரிடம் தெரிவித்திருந்தனர்.

இவ்வாறான நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் உத்தரவில் விசாரணைகள் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

இந்த சம்பவத்தின் உண்மைகள் அனைத்தையும் பொலிஸார் விசாரணை ஊடாக வெளிப்படுத்திக்கொண்டுள்ளதாக கூறப்படும் நிலையில், துப்பாக்கிதாரியையும் ஏனையோரையும் கைது செய்து விசாரித்தனர்.

இதில் இருவர் நீதிவானுக்கும் ஒப்புதல் வாக்கு மூலத்தை குற்றவியல் சட்டத்தின் 127 ஆவது அத்தியாயத்தின் கீழ் வழங்கியுள்ள நிலையில், இச்சம்பவத்தின் பின்னணியில் ஹல்லொலுவவே இருப்பதாக சந்தேகிக்கப்படுகின்றது.
 
அதன்படியே பொலிஸாரின் கோரிக்கை பிரகாரம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பொது மக்கள் தொடர்பாடல் பணிப்பாளராக கடமையாற்றிய கடமையாற்றிய துஷித்த ஹல்லொலுவவை கைது செய்யுமாறு  கொழும்பு நீதிவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
அதன்படி அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.