ரணிலுக்கு அநுர வைத்த செக் : 23 வருடங்கள் தன்னுடன் இருந்த அதிகாரிக்கு அதிரடி இடமாற்றம்



முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
 
அதன்படி இன்று முதல் ரணில் விக்ரமசிங்கவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி அசோக ஆரியவன்ச, காங்கேசன்துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
அசோக ஆரியவன்ச, ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பு பிரிவில் 23 வருடங்கள் பணியாற்றியுள்ளதாகவும் , அவரது பிரத்தியேக பாதுகாப்பு அதிகாரியாக 15 வருடங்கள் பணியாற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேநேரம் தான் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு  வழங்கிய தகவலை, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக இரகசியமாக பெற்று அதனை அரசியல் மேடையில் பகிரங்கமாக கூறியதாக ரணில் விக்கிரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.

எனினும் அந்த தகவலை தாம்  இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் இருந்து பெறவில்லை எனவும் அதனை ரணில் விக்கிரமசிங்கவின் பேஸ்புக் பக்கத்திலிருந்து பெற்றதாகவும் அநுர தரப்பு விளக்கமளித்துள்ளது.
இதேநேரம் இந்த பதில் தெளிவான பதில் இல்லை என ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.

மேலும் நான் தேர்தலில் போட்டியிடவில்லை. பொதுக்கூட்டங்களில் உரையாற்றுவதும் கிடையாது. ஓரிரு விளக்கமளிக்கும் கூட்டங்களில்தான் பங்கேற்று வருகின்றேன். அப்படியிருந்தம் ஊர் முழுதும் என்னைத்தான் ஆளுங்கட்சியினர் திட்டித்தீர்த்து வருகின்றனர். ஆனால், எதிர்க்கட்சித் தலைவரைப் பாராட்டுகின்றனர். இப்படியொரு தேர்தலை நான் கண்டதில்லை எனவும் ரணில் குறிப்பிட்டுள்ளார்.