ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைவாரா ரமேஷ் பத்திரண!

எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவது தொடர்பில் எந்தவொரு முடிவையும் இதுவரை எடுக்கவில்லை என சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

மேலும் தான் இன்னும் மொட்டு கட்சியிலேயே அங்கம் வகிப்பதாகவும் அவர் கட்சி மாற்றம் குறித்து எந்த முடிவையும் இன்னும் எடுக்கவில்லை எனவும் அவர் கூறினார்.

அடுத்த அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிட்டால் அவரை ஆதரிப்பீர்களா என கேள்வி எழுப்பப்பட்ட போது அதற்கு பதிலளித்த அமைச்சர்,

எமது கட்சி அவ்வாறானதொரு முடிவை இன்னும் எடுக்கவில்லை எனவும் கட்சி எடுக்கும் முடிவின் பிரகாரமே எனது தீர்மானம் அமையும் எனவும் தெரிவித்திருந்தார்.

நாடு நெருக்கடியான சூழலில் இருந்த போதே ரணில் விக்ரமசிங்க நாட்டைப் பொறுப்பேற்றார், ரணிலை கட்சி ஆதரிக்க முடிவெடுத்தால் அந்த முடிவை நான் ஏற்பேன் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தார்.