நிராயுதபாணியான போராட்டக்காரர்கள் மீது ராஜபக்ஷ நிழல் அரசாங்கம் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தியதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார்.தாக்குதலுக்கு உத்தரவிட்டது மற்றும் திட்டமிட்டது யார் என்பது குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
பெண்கள், அங்கவீனமுற்ற இராணுவத்தினர் என பலர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இதனை எதிர்க்கட்சியினர் கண்டிப்பதாகவும் அவர் கூறினார்.இத்தாக்குதல்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தி அதற்கு காரணமானவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.தாக்குதல் தொடர்பான பொறுப்பில் இருந்து ஜனாதிபதி விலகிச் செல்ல முடியாது என்றும் அரச அனுசரணையுடன் வன்முறைக்கு உத்தரவு பிறப்பித்தது யார் எனவும் கேள்வி எழுப்பினார்.
 
    
 
                                                 
                                                 
                
             
                
             
                
             
                
             
                
             
                
             
                
            