ரயில்வே ஊழியர்களின் புறக்கணிப்பு போராட்டம் அப்பாவி மக்களை பாதிக்கும்!

அடுத்தவாரம் தொடங்கவுள்ள ரயில்வே ஊழியர்களின் புறக்கணிப்பு போராட்டம் மில்லியன் கணக்கான அப்பாவி மக்களை பாதிக்கும் என பிரித்தானிய போக்குவரத்து செயலாளர் எச்சரித்துள்ளார்.குறிப்பாக பயணிகள் மற்றும் பரீட்சைக்கு செல்லும் மாணவர்கள் போராட்டம் காரணமாக பாதிக்கப்படுவார்கள் என அவர் அறிவித்துள்ளார்.எவ்வாறாயினும் பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட முன்னேற்றத்தை அரசியல்வாதிகள் தடுத்ததாக ரயில், கடல்சார் மற்றும் போக்குவரத்து தொழிற்சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் பிரிட்டன் முழுவதும் கிட்டத்தட்ட அனைத்து முக்கிய மார்க்கங்களில் போராட்டம் இடம்பெறவுள்ளது.தற்போதைய பணவீக்க விகிதத்திற்கு ஏற்ப ஊதியத்தை கோரியே ரயில் புறக்கணிப்பு போராட்டம் இடமபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.