தன் பிள்ளைகள் குறித்த ரகசியம் ஒன்றை தவறுதலாக உளறிக்கொட்டிய புடின்

புடினுடைய குடும்பம் குறித்த தகவல் எதுவுமே அதிகாரப்பூர்வமாக வெளியானதில்லை. அவரது மனைவி யார், பிள்ளைகள் எத்தனை, அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது யாருக்கும் சரியாக தெரியாது.

சில நாடுகளின் தலைவர்கள் வெளிநாடுகளுக்கு அர்சு முறைப் பயணமாக செல்லும்போது, மனைவி மற்றும் பிள்ளைகளைக் கூட உடன் அழைத்துச் செல்வதுண்டு.

ஆனால், புடின் எங்குமே தன் குடும்பத்துடன் சென்றதைக் காட்டும் புகைப்படங்களை பார்ப்பது அரிதிலும் அரிது.

தன் பிள்ளைகள் குறித்த ரகசியம் ஒன்றை உளறிக்கொட்டிய புடின்

இந்நிலையில், தன் தன் பிள்ளைகள் குறித்த ரகசியம் ஒன்றை தவறுதலாக உளறிக்கொட்டியுள்ளார் ரஷ்ய ஜனாதிபதியான புடின்.

ரஷ்யாவில் பள்ளிகள் துவங்கும் முதல் நாளில் சைபீரியாவிலுள்ள பள்ளி ஒன்றிற்கு வருகை புரிந்தார் புடின்.

அப்போது பிள்ளைகளிடம் பேசிய அவர், தனக்கும் சிறு பிள்ளைகள் இருப்பதாகவும், ஆனால், தான் ஒரு நல்ல முன்மாதிரி இல்லை என்றும் கூறியுள்ளார்.

அத்துடன், சமீப காலமாக ரஷ்யா, சீனாவுடன் நெருக்கமான உறவுகளை வளர்த்துவருவதாகத் தெரிவித்த புடின், சீனர்கள் ரஷ்ய மொழியில் ஆர்வம் காட்டிவருவதாகவும், ரஷ்யர்கள் சீன மொழி மீது ஆர்வம் காட்டத் துவங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

தன் சின்னப்பிள்ளைகள் சீன மொழியும் பேசுவதாக தெரிவித்த புடின், அவர்கள் சரளமாக சீன மொழியில் பேசுவதாகவும் தெரிவித்தார்.

விடயம் என்னவென்றால், புடினுக்கு தடகள வீராங்கனையான அலீனாவுடன் (Alina Kabaeva) பிள்ளைகள் இருப்பதாக கூறப்படுகிறது. அத்துடன், அவருக்கு முதல் திருமணம் மூலம் பிறந்த மரியா (Maria Vorontsova) மற்றும் கேத்தரீனா (Katerinia Tikhonova) மூலம் பிறந்த பேரப்பிள்ளைகளும் இருக்கிறார்கள்.

ஆக, அவர் என் பிள்ளைகள் சீன மொழி பேசுகிறார்கள் என்று கூறியது தன் பிள்ளைகளைக் குறித்தா அல்லது பேரப்பிள்ளைகளைக் குறித்தா என்பது தெரியவில்லை.