''செவ்வந்தி திறமையான பெண்.." என புகழ்ந்து பாராட்டிய அமைச்சர்... ''கேவலமான செயல்" என பேராசிரியர் மயுர சமரகோன் ஆதங்கம்





அண்மையில் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட, திட்டமிட்ட குற்ற கும்பல் உறுப்பினரான இஷாரா செவ்வந்தியை வீடமைப்பு மற்றும் நீர் விநியோக பிரதி அமைச்சர் ரீ.பி சரத் புகழ்ந்து பாராட்டியுள்ளார்.

பெண் என்ற வகையில் இஷாராவின் அறிவாற்றல் வியப்பிற்குரியது என அவர் புகழ்ந்து பாராட்டியுள்ளார்.

இஷாரா குற்ற செயல்களுக்காக பயன்படுத்திய அறிவாற்றலை நாட்டின் அபிவிருத்திக்காக பயன்படுத்தி இருந்தால் நாடு முன்னேறி இருக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெலிகந்த நவசேனபுர பகுதியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போது அவர் இந்த விடயங்களை தெரிவித்த அவர்,

வொயிஸ்

குற்றச்செயல் ஒன்று பின்னணியில் பெண் என்ற வகையில் இஷாரா பயணம் செய்த பாதை அவர் எவ்வளவு அறிவாற்றல் கொண்ட நபர் என்பதை வெளிப்படுத்துகின்றது.
அவரது இந்த ஆற்றல்களை நாட்டை அபிவிருத்தி செய்வதற்காக பயன்படுத்தினால் எவ்வளவு நன்மைகள் கிடைக்கப் பெற்றிருக்கும்.  

எனவே நாம் தவறவிட்ட சந்தர்ப்பங்கள் உள்ளன. அவற்றை திருத்தியமைக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேநேரம் இஷாரா செவ்வந்திக்கு ஊடகங்கள் கொடுத்த முக்கியத்துவத்தை பேராதனை பல்கலைக்கழகத்தின் சமூகவியல் பீடத்தின் சிரேஷ்ட பேராசிரியர் மயுர சமரகோன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தனது சமூக ஊடகத்தில் பதிவொன்றை மேற்கொண்டுள்ள அவர்,

நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தியின் வருகையை அறிவிக்க முக்கிய இலத்திரனியல் ஊடகங்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சரியான நேரத்தில் வந்துவிட்டன.

ஒவ்வொரு மணி நேரமும் அறிவிப்பு செய்தது. இஷாராவின் வருகைக்காக மக்கள் காத்திருக்கிறார்கள் என பல செய்திகள் வெளியிடப்பட்டன. அவர் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்.

இதனால் பாதாள உலகில் ஈடுபட்டு பிரபலமடைந்து இறந்தாலும் பரவாயில்லை என்ற உணர்வு இளைஞர், யுவதிகளின் மனதில் விதைக்கப்படுகின்றது.

பொலிஸ் அதிகாரிகள் அவரிடம் கதைத்த காணொளிகளில் மரியாதையாக தங்கை என உரையாடியுள்ளனர். ஆனால் ஸ்பாவில் வேலை செய்த ஒரு பெண் கைது செய்யப்பட்டால் உரையாடும் பாணி கீழ்த்தரமானதாக இருக்கும்.

நாசாவில் வேலை செய்யும் இலங்கையர் வந்துபோவது அவரின் வீட்டு நாய்க்கு கூடத்தெரியாது. 96இல் கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை கொண்டுவந்த அர்ஜுனாவுக்கு கூட இவ்வளவு வரவேற்பு கிடைக்கவில்லை. நாளைக்கு, இஷாரா ஒரு சோப்பு அல்லது கிரீம் விளம்பரத்தில் நடிக்க கூடும் என விமர்சித்துள்ளார்.