பிரதமர் தினேஷ் குணவர்தன தனது பதவியை இராஜினாமா செய்வதாக கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு இராஜினாமா கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அரசியலமைப்பின் 47 (2) ஆவது சரத்தின் பிரகாரம் தனது பதவியை இராஜினாமா செய்வதாக தினேஷ் குணவர்தன குறிப்பிட்ட கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
 
    
 
                                                 
                                                 
                
             
                
             
                
             
                
             
                
             
                
             
                
            