விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, பாதாள உலகத்துடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் குறித்து நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் விடுத்துள்ளார்.
அதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
போதைக்கு அடிமையானவர்கள்
"நாடு முழுவதும் போதைப்பொருள் ஒரு பெரிய பிரச்சனையாக மாறி வருகிறது. எல்லா இடங்களிலும் போதைக்கு அடிமையானவர்கள் உள்ளனர். காவல்துறை, ராணுவம் மற்றும் பல்கலைக்கழகங்களில் கூட போதைப்பொருட்களைப் பயன்படுத்துபவர்கள் உள்ளனர்.
எந்தவொரு சவாலையும் நாங்கள் ஏற்றுக்கொண்டு பாதாள உலகத்தையும் போதைப்பொருட்களையும் ஒழிக்க பாடுபடுவோம்.
எவ்வளவு அவதூறுகள் மற்றும் அவமானங்களுக்கு ஆளானாலும் அதைச் செய்வோம் என்று நாங்கள் சபைக்கு உறுதியளிக்கிறோம்.
முந்தைய அரசாங்கங்களின் போது, ஒரு குறிப்பிட்ட இராணுவ முகாமிலிருந்து 78 ஆயுதங்கள் பாதாள உலகத்திற்கு வழங்கப்பட்டுள்ளன.
அப்படியிருக்கையில் இனிமேலும், இந்த நாட்டில் அரசியலில் ஈடுபடும் ஒரு பாதாள உலகம் இல்லை.” எனத் தெரிவித்துள்ளார்.
