இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை குறைப்பு-புதிய விலை இதோ!

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 92 ரக பெட்ரோலின் விலை லீற்றருக்கு 40 ரூபாயும், 95 ரக பெட்ரோலின் விலை லீற்றருக்கு 30 ரூபாயும் குறைக்கப்படவுள்ளது.வலுச்சக்தி அமைச்சு இதுதொடர்பிலான உத்தியோகப்பூர்வ அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய 92 ரக பெட்ரோலின் புதிய விலை 410 ரூபாயாகவும், 95 ரக பெட்ரோலின் புதிய விலை 510 ரூபாயாகவும் குறைக்கப்படவுள்ளது.ஏனைய எரிபொருட்களின் விலையில் மாற்றம் இல்லை எனவும் அமைச்சு அறிவித்துள்ளது.