இலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதி வழங்கும் நடவடிக்கை தற்போது பிற்போடப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்துடன் கொரோனா காலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இலங்கைக்கான வாகன இறக்குமதி இடைநிறுத்தப்பட்டிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த நேரத்தில், வாகன இறக்குமதிக்காக ஆண்டுக்கு சுமார் 1,100 டொலர்கள் செலவிடப்பட்டதாகவும் ஆனால் அதன் மூலம் நாட்டுக்கு சுமார் 250 பில்லியன் ரூபா வரி வருமானம் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் நாட்டின் டொலர் கையிருப்பைப் பாதுகாக்க வாகன இறக்குமதியை நிறுத்திய போது வரி வருமானமும் இழக்கப்பட்டுள்ளதுடன் அப்போது ஒரு டொலரின் மதிப்பு சுமார் 200 ரூபா ஆகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்திடம் ஊடகமொன்று வினவியுள்ள நிலையில், அடுத்த வருட ஆரம்பத்தில் வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படுமென அந்த சங்கம் பதிலளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
    
 
                                                 
                                                 
                
             
                
             
                
             
                
             
                
             
                
             
                
            