பிரான்ஸில் ஓய்வூதிய போராட்டம் - பரிஸில் பொலிஸார் போராட்டக்காரர்கள் இடையே மோதல்!

நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு இல்லாமல் ஓய்வூதிய சீர்திருத்தங்களை கட்டாயப்படுத்த பிரான்ஸ் அரசாங்கம் தீர்மானித்ததை அடுத்து பரிஸில் பொலிஸார் போராட்டக்காரர்களுடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.ஓய்வுபெறும் வயதை 62லிருந்து 64ஆக உயர்த்தியதன் எதிரொலியாக பிளேஸ் டி லா கான்கார்டில் கூட்டம் கூடியது.

இந்தத் திட்டங்கள் இரண்டு மாதங்கள் சூடான அரசியல் விவாதங்களையும் வேலைநிறுத்தங்களையும் தூண்டின.இறுதியாக, பிரதமர் எலிசபெத் போர்ன் அரசியலமைப்பின் 49:3-ஐப் பயன்படுத்தினார். இது சட்டமன்றத்தில் வாக்கெடுப்பைத் தவிர்க்க அரசாங்கத்தை அனுமதித்தது.பெரும்பான்மையை பெறுவதற்கான உத்தரவாதம் இல்லாததால், சர்ச்சைக்குரிய சட்டமூலம் மீது நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பு நடத்துவதற்கு சில நிமிடங்களுக்கு முன் இந்த முடிவு எடுக்கப்பட்டது.இந்த நடவடிக்கை எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியது. பலர் பிரதமரை கேலி செய்தனர் மற்றும் நாடாளுமன்றத்தில் எதிர்ப்புக்கான அடையாளங்களை வைத்திருந்தனர்.

ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை தாக்கல் செய்யப்படும் என தீவிர வலதுசாரி எதிர்க்கட்சித் தலைவர் மரின் லு பென் பரிந்துரைத்துள்ளார்.

பரிஸ் மற்றும் பிற முக்கிய நகரங்களின் வீதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த நடவடிக்கையை நிராகரித்து, தேசிய கீதத்தைப் பாடி, தொழிற்சங்கக் கொடிகளை அசைத்தனர்.மாலையில் சில போராட்டக்காரர்கள் பொலிஸாருடன் மோதிக்கொண்டனர். ப்ளேஸ் டி லா கான்கார்ட்டின் நடுவில் தீ மூட்டப்பட்டது மற்றும் கேடயங்கள் மற்றும் தடியடிகளுடன் பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி சதுக்கத்தில் திரண்டிருந்த மக்களை அகற்றினர். இரவுக்குள், 120 பேர் கைது செய்யப்பட்டதாக, பரிஸ் பொலிஸார் தெரிவித்தனர்.