பன்வில, நாரம்பனாவ ஒருதொட்ட வீதியின் சேரவத்த சந்தியில் இடம்பெற்ற விபத்தில் 13 பேர் காயமடைந்துள்ளனர்.இந்த விபத்து ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.நாரம்பனாவ பகுதியிலிருந்து பயணித்த சிறிய ரக லொறி ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் பயணித்த முச்சக்கரவண்டியுடன் மோதியதில் லொறி வீதியில் கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் லொறியில் பயணித்த 11 பேரும் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் என காயமடைந்த 13 பேர் தெல்தெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.லொறி மற்றும் முச்சக்கரவண்டியின் சாரதிகள் மேலதிக சிகிச்சைக்காக பேராதனை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
 
    
 
                                                 
                                                 
                
             
                
             
                
             
                
             
                
             
                
             
                
            