இந்தியாவின் ரஃபேல் ஜெட்களை சுட்டு வீழ்த்தியது பாகிஸ்தான் : அமெரிக்கா பரபரப்பு தகவல்

பாகிஸ்தான் ஜே-10 விமானம் மூலம் இந்தியாவின் ரஃபேல் ஜெட்களை வீழ்த்தியதாக அமெரிக்க வட்டாரம் உறுதியாக தெரிவித்துள்ளது.

சீனாவில் தயாரிக்கப்பட்ட ஜே-10 போர் விமானங்களை பாகிஸ்தான் பயன்படுத்தி இந்தியாவின் ரஃபேல் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக இரண்டு முக்கிய அமெரிக்க அதிகாரிகள் ரோய்ட்டர்ஸ{க்கு தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் இந்தியா-பாகிஸ்தான் இடையே கடும் பதற்றத்தை உருவாக்கிய நிலையில் பெரும் சர்வதேச கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

அமெரிக்க தகவலின் பிரகாரம், பாகிஸ்தான் பயன்படுத்திய ஜே-10 விமானங்கள் இந்திய விமானங்களை விமானத்தில் இருந்தே ஏவுகணைகளால் தாக்கி இரண்டு விமானங்களை வீழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இதில் ஒரு ரஃபேல் விமானம் உறுதியாக பாதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதில் பாகிஸ்தானின் எப்-16 விமானங்கள் பங்கேற்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய விமானப்படை இதுவரை எந்த விமானத்தையும் இழந்ததாக ஏற்கவில்லை.
“பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இலக்காக கொண்டு தாக்குதல் நடத்தியதாக” மட்டுமே இந்தியா கூறியுள்ளது.

பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் குவாஜா அசிஃப், “மூன்று ரஃபேல் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக” தெரிவித்த நிலையில், இந்தியா இதனை மறுத்துள்ளது.

இந்த சம்பவம் சீனாவின் ஜே-10 விமானங்களின் செயல்திறனை உலக ரீதியாக கணிக்க காரணமாகியுள்ளது.   ரஃபேல் மற்றும் ஜே-10 விமானங்கள் இடையேயான நேரடி மோதல் பாசிச நிலைகளை பாதிக்கக்கூடியதாகவும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்தியா தனது விமான இழப்புகளை ஏற்காத நிலையில், சர்வதேச சமூகம் அமைதியை வலியுறுத்தி வருகிறது