ஷாங்காய் உச்சி மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்-இன் முகபாவணை இணைய தளங்களில் வைரலாகியுள்ளது.
சீனாவின் டியான்ஜின் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு நடைபெற்றது.
மாநாட்டில் இந்தியா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த உலக தலைவர்கள் சந்தித்து கொண்டனர்.
மாநாட்டின் குறிப்பிட்ட சில தருணம் இணையத்தில் வைரலாகி வருகிறது,
அந்த வகையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் ஆகிய மூவரும் மிக நெருக்கமாக நட்புறவுடன் சிரித்து பேசிக் கொண்டது அதிக கவனம் பெற்றுள்ளது.
இவற்றில் குறிப்பாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தனித்து விடப்பட்ட தருணமும், புடின் - மோடி கடந்து சென்ற போது ஷெபாஸ் ஷெரீப்-இன் முக பாவனையும் இணையத்தில் பலரும் பலவாறு பதிவுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
உலக அளவில் உள்ள சமூக ஊடக பயனர்கள் இந்த தருணத்தை கேலிக்கையும் செய்து வருகின்றனர்.
உச்சி மாநாட்டில் இருந்து கசிந்த ஆடியோ என பெயரிடப்பட்ட வீடியோ மீம் ஒன்றில், மோடி, புடின் மற்றும் ஷி ஜின்பிங் மூவரும் பேசிக்கொள்ளும் வேடிக்கையான தருணம் இணையவாசிகள் மத்தியில் பெரும் பேசுபொருளாகியுள்ளது