வெலிக்கடை பொலிஸ் நிலையத்திலிருந்து அதிகாரப்பூர்வ பேருந்து உரிமப் புத்தகம் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயன்பாட்டிற்குப் பிறகு காவலில் இருந்த 2006001 முதல் 2006100 வரையிலான அதிகாரப்பூர்வப் புத்தகமே இவ்வாறு காணாமல் போயுள்ளது.
கடந்த 31ஆம் திகதி, இந்த உரிமப் புத்தகம் காணாமல் போனது தெரியவந்துள்ளது.
இந்நிலையில், இது தொடர்பான விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் தொலைபேசி செய்தி மூலம் குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.