கொரோனா தொற்றுக்கு எதிராக மூன்று தடவைகள் தடுப்பூசி பெறாத குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு ஐக்கிய அரபு இராச்சியம் தடை விதிக்கவுள்ளது.வெளிநாடு செல்வதற்கான இந்தத் தடை எதிர்வரும் 1 ஆம் திகதி அமுலுக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.எனினும் தடுப்பூசி பெறுவது தொடர்பில் மருத்துவரீதியான விலக்கு உள்ளவர்களுக்கு இந்தத் தடை பொருந்தாது எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.