இலங்கையில் இன்று முதல் அதிவேக வீதிகளில் புதிய நடைமுறை : வெளியான முக்கிய அறிவிப்பு


இன்று முதல் அதிவேக வீதிகளில் பயணிக்கும் இலகுரக வாகனங்களின் பின்புற இருக்கைகளில் பயணிப்பவர்கள் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விசேட சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், அதிவேக வீதிகளில் பயணிக்கும் பயணிகள் பேருந்துகளில் உள்ள அனைத்து பயணிகளும் 2025 செப்டம்பர் 1 முதல் சீட் பெல்ட் அணிவதை கட்டாயமாக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இது குறித்து விளக்கமளித்த தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பொறியியலாளர் ஏ.பி. சந்திரபாலா
 
"2025 செப்டம்பர் 1 முதல், அதிவேக வீதிகளில் பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகளில் சாரதி உட்பட அனைத்து பயணிகளும் சீட் பெல்ட் அணிவதை கட்டாயமாக்கும் இலக்கை அடைய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது." என்றார்.