ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் இணையும் புதிய ஏர்பஸ் A330-200 விமானம் இலங்கையை வந்தடைந்துள்ளது.
கொழும்பு காலிமுகத்திடல் கடற்கரைக்கு மேலாக குறித்த விமானம் பறந்து செல்லும் காட்சியை பலரும் பார்வையிட்டுள்ளனர்.
பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் இருந்து A330-200 wide-body என்ற ஏர்பஸ் விமானம் இலங்கையை வந்தடைந்தது.
குறித்த விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்க முன்னர், மிகவும் தாழ்வாக கொழும்பின் காலிமுகத்திடல் கடற்கரையோரமாக பயணிக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதற்கமைய இன்று காலை 9.40 மணியளவில் கொழும்பு காலிமுகத்திடல்> கொள்ளுப்பிட்டி - பாணந்துறை கடற்கரை அண்டிய பகுதியில் தாழ்வாக பறந்து சென்றுள்ளது.
இதனை அங்கு கூடியியிருந்த மக்கள் பார்வையிட்டனர். மேலும் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த விமானத்திற்கு நீர்தாரை அடிக்கப்பட்டு வரவேற்பு வழங்கப்பட்டது.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் 8 ஆண்டுகளுக்குப் பிறகு அதன் முதல் அகல உடல் விமானத்தை வரவேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.