குறைந்தபட்சம் இரு வருடங்கள் பாராளுமன்ற உறுப்பினராக இருக்க விரும்புகின்றேன். ஏனெனில் பாராளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தி முக்கிய சில தகவல்களை வெளியிட வேண்டியுள்ளது என் பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
அத்துடன், ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தமது அமைப்பு விரைவில் ஊடக சந்திப்பொன்றை நடத்தவுள்ளது எனவும் அவர் கூறினார்.
அத்துடன், ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தமது அமைப்பு விரைவில் ஊடக சந்திப்பொன்றை நடத்தவுள்ளது எனவும் அவர் கூறினார்.
இதேநேரம் ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவே முன்னிலையில் இருக்கின்றார் எனவும் அவர் குற்றிப்பட்டுள்ளார்.
இதற்கிடையில் எதிர்க்கட்சி தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச தலைமையில் முன்னெடுக்கப்படுகின்ற பிரபஞ்சம் வேலைத்திட்டம் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
நேற்றையதினம் அம்பாறையில் நடைபெறவிருந்த பிரபஞ்சம் நிகழ்வுகளையும் தேர்தல்கள் ஆணைக்குழு இடைநிறுத்தியுள்ளது.
ஒன்பது பாடசாலைகளுக்கு வசதியான வகுப்பறை உபகரணங்களை வழங்கும் பிரபஞ்சம் திட்டங்களே இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடத்தும் பொதுக்கூட்டங்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு மௌனம் சாதித்த போதிலும்,
சஜித் பிரேமதாசவின் நிகழ்ச்சிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளமை நியாயமற்றது என்றும் நளின் பண்டார சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை எதிர்வரும் நாட்களில் பிரபஞ்சம் திட்டத்தில் 70 நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் நளின் பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் ஜனாதிபதித் தேர்தல் வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று தேர்தல்கள் ஆணைக்குழுவில் நேற்று இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலானது பாதுகாப்புப் படைகளின் பிரதானிகளின் பங்கேற்புடன் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.