மட்டக்களப்பில் ஆயுதங்களுடன் மௌலவி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் மட்டக்களப்பு மாஞ்சோலை பிரதேசத்தில் மௌலவி ஒருவர், இரண்டு டீ.56 ரக துப்பாக்கிகள், அறுபது தோட்டாக்கள், இரண்டு மகசீன்கள், பைனாகுலர் என்பவற்றுடன் மோட்டார் சைக்கிளில் செல்லும் போது அரலகங்வில விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட மௌலவி ஓட்டமாவடி மாஞ்சோலை பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவர் எனவும் அவர் பாரியளவில் கருப்பட்டி வியாபாரத்தில் ஈடுபட்டவர் எனவும் விசாரணைகளை மேற்கொண்டு வரும் விசேட அதிரடிப்படையினர் தெரிவிக்கின்றனர்.