மகாராணியின் இறுதி ஊர்வலத்தில் பலர் மயங்கி சரிவு

ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதி ஊர்வலத்தில் இராணுவ வீரர், காவலர், அரண்மனை ஊழியர்கள் என பலர் மயக்கமடைந்து சரிந்து வீழ்ந்துள்ளனர்.

திங்களன்று ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கின் போது இராணுவ வீரர் ஒருவர், காவல்துறை அதிகாரி மற்றும் பக்கிங்ஹாம் அரண்மனையின் பணியாளர்கள் என அனைவரும் சரிந்து விழுந்தனர்.

அவர்கள் சம்பவ இடத்திலிருந்து ஸ்ட்ரெச்சர்களில் கொண்டு செல்லப்பட்டனர்.

டெய்லி மெயில் தகவல் படி, அவர்கள் அனைவரும் ராணியின் இறுதிச் சடங்கில் பணியில் இருந்தபோது வெவ்வேறு இடங்களில் மயங்கி வீழ்ந்தனர்.

வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் ராணியின் உடல் வைக்கப்பட்ட பேழையை கண்காணிக்கும் போது காவலாளி மயக்கமடைந்து வீழ்ந்த நிலையில் இன்று இந்த சம்பவங்கள் நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.