பிரபாகரனை காப்பாற்ற முயற்சித்த மஹிந்த - பொன்சேகா சர்ச்சைக்குரிய கருத்து

முன்னாள் ஜனாதிபதி மிந்த ராஜபக்ஷ  தொடர்பில் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா  சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஜா-எல பகுதியில் நேற்று (1) நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே இதனைத் தெரிவித்த அவர்,

2009 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச விடுதலைப் புலிகளுடன் போர் நிறுத்தம் செய்து பிரபாகரனுக்கும் ஏனைய தலைவர்களுக்கும் தப்பிச் செல்வதற்கான வாய்ப்பை வழங்க முயற்சித்தார்.

2009 ஜனவரி 31 ஆம் திகதியன்று நான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன். 

பெப்ரவரி முதலாம் திகதி காலை கோட்டாபய ராஜபக்ஷ என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு, “நீங்கள் ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள். பொறுப்பை ஜகத் ஜயசூரியவிடம் ஒப்படையுங்கள்” எனக் கூறினார்.

அந்த காலத்தில் கிளிநொச்சியில் போராடிய 58வது படையணி சுமார் 4–5 கிலோமீட்டர் பின்வாங்கியது. அந்த தாக்குதலில் சுமார் 500 படையினரைக் இழந்தோம்.

இதே சமயம், யுத்தநிறுத்தம் அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த யுத்தநிறுத்தத்தின் போது, எல்.டி.டி.இ. மீண்டும் தங்கள் படைகளை திரட்டி, தாக்குதலை முன்னெடுத்தது.

அப்போது மிகப் பெரிய சவால்களை எதிர்கொண்டோம் என்று அவர் நினைவுகூர்ந்தார்.