முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு அவசர சத்திர சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
வலது காலில் இந்த சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கு முன்னர் அவரது இடது காலில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது இடது காலில் சிரட்டையை அகற்றி புதிய சிரட்டை வைப்பதற்கான சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது.
தற்போது மகிந்தவின் வலது காலில் உள்ள சிரட்டையை அகற்றி புதிய சிரட்டையை பொருத்தும் சத்திர சிகிச்சையே மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சத்திர சிகிச்சையின் பின்னர் மகிந்த தனது வீட்டில் ஓய்வெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த செய்தியை கேள்விப்பட்ட பல அரசியல்வாதிகள் கட்சி பேதமின்றி முன்னாள் ஜனாதிபதியின் நலம் விசாரிப்பதற்காக அவரின் வீட்டிற்கு செல்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.