300 பேருடன் பயணித்த சொகுசு கப்பல் ஒன்று நடுக்கடலில் தீப்பற்றி எரிந்து விபத்துக்குள்ளானதையடுத்து அதில் பயணித்தவர்கள் உயிரை காப்பாற்றி கொள்ள கடலில் குதித்த வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேசியாவின் கடலில் பயணித்த கே.எம் பார்சிலோனா வீஏ என்ற சொகுசு கப்பலில் பாரிய தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இருந்து தப்பிக்க அதில் பயணித்த பயணிகள், தங்கள் குழந்தைகளுடன் கடலில் குதித்தனர்.
இந்தோனேசியாவில் உள்ள மனோடோ – த{ஹடா தீவுகளுக்கு இடையே கே.எம் பார்சிலோனா வீ.ஏ கப்பல் இயக்கப்பட்டுவருகிறது. இந்தக் கப்பலில் சுமார் 300க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர்.

இந்நிலையில், நேற்று பிற்பகல் அந்தக் கப்பலில் திடீரென தீப்பற்றியது. இதனைக் கண்ட பயணிகள் அச்சத்தில் கத்தி கூச்சலிட்டனர்.
தீ வேகமாக கப்பலில் பரவியதைத் தொடர்ந்து பயணிகள் தங்கள் உயிரை காத்துகொள்வதற்காக கடலில் குதித்தனர்.
கடலில் குதித்தவர்கள் பெரும்பாலானோர், உயிர் காக்கும் ஜெர்கெட்களை அணிந்திருந்தனர். மேலும், குழந்தைகளுடன் வந்தவர்கள், தங்கள் குழந்தைகளை தூக்கிக் கொண்டு கடலில் குதித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும், உடனடியாக அந்தப் பகுதியில் இருந்த மீனவர்களும், மீட்பு குழுவினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கடலில் தத்தளித்துக்கொண்டிருந்தவர்களை
மேலும் கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். நடுக்கடலில் கப்பல் முழுக்க தீயில் எரியும் காட்சிகள் தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகிவருகிறது.
இந்த தீவிபத்தில், பலர் பலியாகியிருப்பதாகவும் பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.