உக்ரேனின் லுஹான்ஸ்க் பிராந்தியத்தை ரஷ்யா முழுமையாக கைப்பற்றியதாக அறிவித்துள்ளது.
உக்ரேனின் லுஹான்ஸ்க் பிராந்தியத்தில் ரஷ்யாவால் நியமிக்கப்பட்ட ஒரு அதிகாரி, 2022 இல் ரஷ்யா சட்டவிரோதமாக இணைத்துக்கொண்ட இப்பகுதியை மொஸ்கோவின் படைகள் முழுமையாக ஆக்கிரமித்துவிட்டதாக அறிவித்துள்ளார்.
கிரெம்ளினால் நியமிக்கப்பட்ட பிராந்தியத் தலைவர் லியோனிட் பாசெக்னிக், ரஷ்ய அரச ஊடகத்திடம் லுஹான்ஸ்க் இப்போது முழுமையாக விடுவிக்கப்பட்டுவிட்டது என்று தெரிவித்துள்ளார்.
இந்தக் கூற்று உறுதிப்படுத்தப்பட்டால், மூன்று ஆண்டுகளுக்கும் மேலான மோதலுக்குப் பிறகு, லுஹான்ஸ்க் ரஷ்ய ஆக்கிரமிப்பின் கீழ் முழுமையாக வரும் முதல் உக்ரேனிய பிராந்தியமாக மாறும்.
இந்நிலையில் உக்ரேன் பாசெக்னிக்கின் இந்தக் கூற்றை உடனடியாக உறுதிப்படுத்தவில்லை.
லுஹான்ஸ்க் மற்றும் பிற உக்ரேனிய பகுதிகள் மீதான ரஷ்யாவின் உரிமைகோரல்கள் சட்டவிரோதமானவை மற்றும் ஆதாரமற்றவை என்று உக்ரேன் தொடர்ந்து கூறி வருகிறது.
மேலும், இந்த பிராந்தியங்கள் மீதான ரஷ்ய இறையாண்மையை ஒருபோதும் அங்கீகரிக்கப் போவதில்லை என்றும் சூளுரைத்துள்ளது.