இலங்கை(sri lanka) மற்றும் சிங்கப்பூர்(singapore) இடையே குறைந்த கட்டணத்துன் கூடிய விமானசேவை இன்றுமுதல் (நவ. 21) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஜெட் ஸ்டார் ஏர்லைன்ஸின் முதல் கன்னி விமானமான ஜெட் ஸ்டார் ஏர்லைன்ஸின் விமானம் சிங்கப்பூரில் இருந்து இன்று காலை 10:15 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. இவ்வாறு வந்த விமானம் நீர் வணக்கத்துடன் உத்தியோகபூர்வமாக வரவேற்றகப்பட்டது.
இந்த முதல் விமானத்திற்கு ஏர்பஸ் ஏ-320 விமானம் பயன்படுத்தப்பட்டது மற்றும் 179 பயணிகள் மற்றும் ஆறு பணியாளர்கள் வந்துள்ளனர்.
இந்த விமானங்கள் வாரத்தில் 5 நாட்களும் இயக்கப்படும் இதன்படி ஞாயிறு, புதன் மற்றும் சனிக்கிழமைகளில் இரவு 10:30 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்து, அன்றைய தினம் இரவு 11:30 மணிக்கு சிங்கப்பூருக்குப் புறப்படும்.
மேலும், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10:30 மணிக்கு விமான நிலையத்திற்கு வரும் இந்த விமானங்கள் அன்றைய தினம் இரவு 11:30 மணிக்கு சிங்கப்பூர் புறப்படும்.
இந்த விமான நிறுவனம் இலங்கைக்கு வந்து சிங்கப்பூர் திரும்புவதற்கான விமானக் கட்டணமாக ரூபா 140,000 வசூலிப்பதாக விமான நிலைய மேலாளர் குறிப்பிட்டார்.
இன்று வந்த இந்த விமானத்தில் இருந்து 178 பயணிகள் மற்றும் 6 பணியாளர்கள் இன்று இரவு 11:30 மணிக்கு புறப்படவுள்ளனர்.