அழகானவர்கள் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியல் - முதலிடத்தில் தெற்காசிய நாடு!
உலகில் மிக அழகான மக்களைக் கொண்ட 50 நாடுகளின் பட்டியல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த பட்டியலை ரெட்டிட் (Reddit) தளம் வெளியிட்டுள்ளது.

அதன்படி முதல் பத்து நாடுகளின் பட்டியலை இதில் பார்க்கலாம்.

இந்த பட்டியலின்படி, 926 வாக்குகளுடன் டென்மார்க் 10 ஆவது இடத்திலும், 958 வாக்குகளுடன் உக்ரைன் 9 ஆவது இடத்திலும், 1,024 வாக்குகளுடன் இத்தாலி 8 ஆவது இடத்திலும் உள்ளது.

1,033 வாக்குகளுடன் பிரான்ஸ் 7 ஆவது இடத்திலும், 1,096 வாக்குகளுடன் பிரேசில் 6 ஆவது இடத்திலும், 1,312 வாக்குகளுடன் கனடா 5 ஆவது இடத்திலும், 1,468 வாக்குகளுடன் ஜப்பான் 4 ஆவது இடத்திலும் உள்ளது.

ரெட்டிட் (Reddit) தளத்தின் குறித்த பட்டியலின்படி, 3 ஆவது இடத்தில் 1,899 வாக்குகளுடன் சுவீடன் உள்ளதுடன், 1,936 வாக்குகளுடன் அமெரிக்கா 2 ஆவது இடத்திலும் உள்ளது.

அதேசமயம், குறித்த பட்டியலில் முதலிடத்தில் 2,628 வாக்குகளுடன் இந்தியா உள்ளமை குறிப்பிடத்தக்கது.