வெள்ளையா இருக்கவன் பொய் சொல்ல மாட்டான் என்பது போல ஏஐ பொய் சொல்லாது என பலரும் நம்பி வரும் நிலையில், பிரபல ஏஐ மொடல் ஒன்று ஒரு நிறுவனத்தின் மொத்த கோடிங் டேட்டாவையும் அழித்துவிட்டு, பொய் சொல்லி நாடகமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது அனைத்து துறைகளிலும் ஏஐ வருகையால் ஆட்டோமேஷன் செயல்பாடுகள் நடந்து வரும் நிலையில் அதற்காகவே பல ஏஐ கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. அதுபோல Software Coding-ல் Replit AI என்னும் கருவி சமீபமாக பரவலாக பயன்படுத்தப்படுகிறது. ரெப்ளிட் கொண்டு கோடிங் தரவுகளை குறைந்த ஆளனியை வைத்தே எளிதாக செய்துவிட முடியும்.
இந்நிலையில் ரெப்ளிட்டை நம்பி Lemkin என்ற நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கான கோடிங் தரவுகளை தயாரித்து வந்துள்ளது. ஆனால் ஏதோ ஒரு தொழினுட் கோளாறு காரணமாக ரெப்ளிட் AI அந்த நிறுவனத்தின் கோடிங் தரவுகளை மொத்தமாக அழித்தது மட்டுமல்லாமல், தனக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று பொய் சொல்லியுள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த லெம்கின் நிறுவனம் ரெப்ளிட் AI யின் பொறுப்பற்ற தன்மை குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளனர்.
இதுகுறித்து கருத்து வெளியிட்ட ரெப்ளிட் ஏஐ-யின் நிறுவன செயல் அதிகாரி அம்ஜத் மஸாத், “ரெப்ளிட் செய்த இந்த செயல் ஏற்றுக்கொள்ள முடியாதது மட்டுமல்ல மீண்டும் எப்போதும் நடந்துவிடக்கூடாதது” என்று வருத்தம் தெரிவித்துள்ளார். ரெப்ளிட்டின் இந்த செயலால் அதைக் கொண்டு கோடிங் எழுதுவோர் அச்சத்தில் உள்ளனர்.
 
    
 
                                                 
                                                 
                
             
                
             
                
             
                
             
                
             
                
             
                
            