வரி காலக்கெடு முடிவதற்குள் அமெரிக்காவுடன் உடன்பாட்டை எட்டுவோம் - அரசாங்கம்



தீர்வை வரி பிரச்சினை தொடர்பிலான இணக்கப்பாட்டை அந்த தீர்வை வரி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 90 நாட்களுக்குள் மேற்கொள்ளப்பட எதிர்பாரப்பதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதியமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று  நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

உலகெங்கிலும் உள்ள சுமார் நூறு நாடுகளை குறிவைத்து, வெளிநாட்டு இறக்குமதிகள் மீதான வரிகளை அதிகரிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடந்த ஏப்ரல் 2 ஆம் திகதி நடவடிக்கை எடுத்தார்.

அதே நேரத்தில், அமெரிக்காவுடனான தற்போதைய வர்த்தக பற்றாக்குறையின் அடிப்படையில் இலங்கை மீது 44% வரி விதிக்கப்பட்ட நிலையில், அதனை 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்க ஜனாதிபதி டிரம்ப் நடவடிக்கை எடுத்தார்.

இது தொடர்பாக இலங்கை அரசாங்கக் குழு ஏற்கனவே அமெரிக்காவுடன் கலந்துரையாடல்களைத் தொடங்கியுள்ளதுடன், அதன் முன்னேற்றம் குறித்த விபரங்கள் இன்று வெளியிடப்பட்டன.