ஈழத்தமிழ் பிள்ளைகள் எதிர்கொள்ளும் முக்கிய ஆபத்து! குறி வைக்கப்பட வேண்டிய இளம் பெண்கள்

 ஈழத்தில் எதிர்காலச் சந்ததிகள் எதிர்கொண்டு வருகின்ற ஒரு ஆபத்து தொடர்பாகவும், அந்த ஆபத்தை எதிர்கொள்ள இன்றைய பதின்ம வயது பெண்கள் எவ்வாறு குறி வைக்கப்பட்டு கையாளப்பட வேண்டும் என்பது பற்றியதுமான ஒரு ஆய்வு தான் இது.

இளம் தாய்மார்களில் தாய்ப்பால் ஊட்டுமளவு குறைந்து செல்கிறதாக வைத்தியசாலை தரவுகளை அடிப்படையாக வைத்துக் கூறப்படுகின்றது.

குறிப்பாக தமிழர் தாயகத்திலுள்ள பெரும்பாலான தாய்மார்களில் உற்பத்தியாகும் பாலின் அளவு குறைவாக இருப்பதால் பிறந்த குழந்தைக்கு பால் ஊட்ட போதுமானதாக இல்லை என்று கூறப்படுகின்றது.

பசியால் அழும் குழந்தையை பசியாற்ற பால்மாவினை கொண்டு பால் தயாரித்து ஊட்டுகின்றார்கள்.இந்த நிலை கடந்த இரு தசாப்தங்களாக இந்த நிலைமை தொடர்கிறது. குறைந்து செல்லாது கூடிச் செல்கின்றது.

இந்த நிலமை படிப்படியாக அதிகரித்துச் செல்வது கவலைக்குரியது.

மருத்துவ உலகும் சரி சமூகவியலாளர்களும் சரி இவை பற்றி தங்கள் கவனங்களை செலுத்திக் கொள்ள முடியாமல் போனது ஏனோ?

குழந்தைகள் பிரசவிக்கும் போது குடும்பச் செலவு அதிகரிக்கின்றது. மாத வருமானத்தை திட்டமிட்டு செலவழிப்பதை குழப்பி விடுகின்றது.

இன்றைய சூழலில் குழந்தைகளின் முதல் ஒருவருட பால்மாத் தேவைக்காக (நான்கு நாட்களுக்கு ஒரு பால்மா பேணி என்ற அடிப்படையில் மாதத்திற்கு ஏழு பால்மாப் பேணிகள் தேவை.

ஒரு வருடத்திற்கு எண்பத்தினான்கு மாப்பேணிகள் தேவையாகிறது.

ஒரு பேணி மா இரண்டாயிரம் இலங்கை ரூபா வீதம் வருடத்திற்கான செலவு ஒரு லட்சத்து நாற்பதாயிரம் வரை செலவாகிறது.) ஒரு லட்சத்து நாற்பதாயிரம் வரை செலவாகிறது.

அன்றாட தேவைகளுக்கான செலவுகளுக்கு மேலதிகமாக இது அமைந்து விடுகிறது. மாத வருமானத்தில் பெரும்பகுதியை கரைக்கின்றது.

பாலூட்டும் விலங்குகளாக மனிதர்கள் இருக்கின்ற போதும் இன்றைய சூழலில் பிறக்கும் குழந்தைகளுக்கு பாலூட்டும் திறனற்ற மாந்தராக மாறிக்கொண்டு செல்வது ஏனோ?

தாய்ப்பால் பற்றிய பெருந்தன்மைகளைப் பேசும் போது இன்றைய பெண்கள் பாலூட்டும் இயல்தகவில்லாது பால்மாக்களை நாடிச் செல்வது தவிர்க்கப்பட வேண்டும்.

வேலையின்மை, பொருட்களின் விலையேற்றம் என நாளாந்த செலவுகள் கூடிச் செல்ல உழைப்பதற்கே நாளில் பெரும்பகுதி செலவாகிப் போகிறது.

சிந்திக்க நேரமில்லை.ஒய்வே இல்லாது உழைக்கும் மனோநிலை பெரும் மனப் பாரமாகிப்போகிறது.

புதிய முயற்சிகளை சிந்திக்கும் நிலை பறிக்கப்படுவதால் புதியவை தோன்றாது பிழைப்புக்கு உழைத்து வாழ்ந்திடு செத்தல் மட்டுமே மிஞ்சிப் போகப் போகிறது.

இந்நிலை தொடர்ந்தால் ஈழத்தமிழ்ப் பிள்ளைகள் மந்த போசாக்குடையவர்களாகிப் போவார்கள்.

திறனற்ற நாளைய சமூகம் தோன்ற வழிகோலும். உழைப்பைக் கரைத்து பாலாக்கும் நிலை மாறிட வேண்டும் எனில் பதின்ம வயது பெண் பிள்ளைகளின் வளர்ப்பு மேம்பட வேண்டும்.

தமிழ்ச் சமூகம் பொருளாதார வலுமிக்கதாகிட தாய்ப்பால் ஊற்றெடுக்கும் வழிகளை இனம் காண வேண்டியது அவசிய அவசர தேவையாகிறது.

பதின்ம வயது பெண் பிள்ளைகளின் போசாக்கினை இந்த திருப்தி செய்ய வேண்டும்.

இயற்கை விவசாய உணவுகள் மூலம் போசாக்கைப் பெறவேண்டும்.

அவர்களின் மனநிலையில் ஆரோக்கியம் பேசப்படுவதோடு பொறுப்புணரும் வகையில் சுகாதாரம் முன்னெடுக்கப்பட வேண்டும்.

இதனால் ஆகும் நாளை நல்ல மாற்றம்.

நாளை மறையும் தாய்பபாலில்லாத பிள்ளைகளின் வாழ்வு.

பாலில்லாத தாய்மார் மாறிக்கொள்ள உதவும். மருத்துவ உலகம் இதுபற்றி சிந்திக்க வேண்டும்.

தமிழ் ஆர்வலர்கள் யோசிக்க வேண்டும்.

இதற்கான காரணங்களைத் தேடி தீர்வுகளை முன்னெடுத்து எதிர்காலத்தில் மாற்றங்களை பெற்றிட முனைய வேண்டும். தாரமாகி தாயாகும் பெண்கள் பாலூட்டி மகிழ்வூட்டி தம் சேயை வளர்த்தலே செயலாற்றல் மிக்க நாளைய சமூகம் தோன்ற உதவும்.