இஷாரா செவ்வந்தியுடன் தொடர்புடைய நால்வர் இதுவரையில் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்டங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.
கணேமுல்ல சஞ்சீவ கொலையின் பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி அண்மையில் நேபாளத்திலிருந்து கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டார்.
அவரிடம் குற்றப்பிரிவுப் பொலிஸார் பல கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில் தற்போது அவர் தொடர்பான திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
கணேமுல்ல சஞ்சீவ கொலைக்குப் பின்னர் இஷாரா செவ்வந்தி மத்துகமவிலும் அதன்பின்னர் மித்தெனியவிலும் தலைமறைவாகியிருந்த இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.
அந்த வகையிலேயே யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த நால்வர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் விசாரணைகளுக்காக இஷாரா செவ்வந்தி யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வரப்படுவாரா? என்பது குறித்த கேள்விகள் பலரிடமும் தற்போது எழுந்துள்ளன.
இதற்கிடையே இஷாராவின் மாமாவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் பல தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் தற்போது அடுத்தடுத்து இஷாரா தொடர்பான தகவல்கள் வெளியாகி வருகின்றது.
மத்துகம,மித்தெனிய பகுதிகளில் இஷாராவிற்கு அடைக்கலம் அமைத்துக் கொடுத்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட பொலிஸ் அலுவலர் உள்ளிட்ட நான்கு பேர் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.