கொட்டாஞ்சேனை மாணவி மரணம் : பின்னணியில் செயற்படும் செல்வாக்கு



கொழும்பில் தற்கொலை செய்துகொண்ட மாணவியின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு உச்ச தண்டனை வழங்க வேண்டும் என  அகில  இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம்  கோரிக்கை விடுத்துள்ளது.  

அந்த சங்கம் விடுத்துள்ள அறிக்கை  ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் யாழ்ப்பாணம் புங்குடுதீவில் மாணவி வித்தியா கோரமாகக் கொலைசெய்யப்பட்போது இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் பல்லாயிரம்பேரை ஒன்றுதிரட்டி குற்றவாளிகளுக்கு தண்டனைவழங்க பேரணி நடாத்தியதை யாவரும் அறிவர்.

அதேபோன்று இலங்கையின் தலை நகர் பகுதி கொழும்பில் தமிழ் மாணவியொருவர் பரிதாபமாகக் கொல்லப்பட்டிருக்கின்றார்.

இந்த கொலைச் சம்பவத்தை பலர் மூடி மறைக்க முயற்சிக்கின்றனர். சந்தேக நபர்களின் பின்னணியில் பல செல்வாக்கு காணப்படுகின்றது.

எதுவாயினும் ஒரு பிள்ளையின் மரணத்திற்கு ஒரு ஆசிரியர் காரணமாக இருந்தால் அவருக்கு மரண தண்டனை வழங்கப்படவேண்டும்.

ஆகையால் அந்த  குற்றவாளிக்குத் தண்டனை வழங்கப்படும் அதேவேளை உடந்தையானவர்களை தெரியப்படுத்தி  அவர்களுக்கும் தண்டனை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம் என அந்த அறிக்கையில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.