கோட்டா கோ கம மீள உருவாக்கம்-தொடரும் போராட்டம்!

காலிமுகத்திடலில் ஏற்பட்ட வன்முறையை அடுத்து தரைமட்டமாக்கப்பட்ட கோட்டா கோ கம மீள உருவாக்கப்பட்டு இன்றும் (புதன்கிழமை) போராட்டம் தொடர்கிறது.கடந்த ஏப்ரல் மாதம் 9ம் திகதி கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் அமைதியான முறையில் ஆரம்பமான மக்கள் எழுச்சிப் போராட்டம் ஒரு மாதத்தைக் கடந்த நிலையில் பல எதிர்ப்புகளையும் மீறி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.இந்தப் போராட்டத்திற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் வழமைப்போன்று நேற்று இரவும் அரசாங்கத்தை வீட்டுக்குச் செல்லுமாறு கோசமெழுப்பி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அத்தோடு நேற்று முன்தினம் இடம்பெற்ற தாக்குதலில் காயமடைந்தவர்களை நினைவுகூரும் வகையில் 5 நிமிடம் மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து, சர்வமதத் தலைவர்களால் வன்முறையை நிறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.