கச்சதீவு விவகாரம் - அமைச்சர் டக்ளஸ் வெளியிட்ட தகவல்


கச்சதீவு விவகாரம் தொடர்பாக பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலைக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைக்கவுள்ளதாக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

மன்னார் கடற்றொழிலாளர்களுக்கும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானதாவிற்கும் இடையிலான விசேட சந்திப்பின் போதே இதனைக் கூறினார்.

கிராம ரீதியாக உள்ள மீன்பிடி சங்கங்களை மீள் அமைப்பதன் ஊடாக, இலங்கையின் பொருளாதார மேம்பாட்டை முன்னோக்கி கொண்டு செல்லுதல் மற்றும் கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் நோக்கில் குறித்த கலந்துரையாடல் மன்னாரில் இடம்பெற்றது.


மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகளுடனான இந்த விசேட சந்திப்பில் தற்போது கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

மீனவ காப்புறுதி திட்ட பயனாளர்களுக்கு காப்புறுதி பணத்தினையும் அமைச்சர் கையளித்ததுடன், ஆழ்கடல் மீன்பிடி தொடர்பாக விசேட பயிற்சி நெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ்களையும் வழங்கி வைத்துள்ளார்.


இந்த நிகழ்வின் பின்னர் ஊடங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே எரிபொருள் பிரச்சினை, கச்சதீவு விவகாரம், தொடர்பாக டக்ளஸ் தேவானந்தா ஆராய்ந்தாக கூறினார்