கனேடியப் பிரதமர் பதவியை இழக்கும் அபாயம்

கனடாவில் அரசியல் சூழல் தொடர்ந்து மோசமடைந்து வரும் நிலையில், ஜஸ்டின் ட்ரூடோ பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மக்கள் மத்தியிலும் அவரது சொந்தக் கட்சியிலும் அவருக்கு எதிரான அழுத்தங்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

காலிஸ்தான் பயங்கரவாதி கொலை விவகாரத்தில் இந்தியாவை குற்றஞ்சாட்டிய நிலையில், சர்வதேச அளவில் அவர் சர்ச்சையில் சிக்கியிருந்தார்.

அத்தோடு விலைவாசி அதிகரிப்பு, வீட்டு வாடகை  அதிகரிப்பு, பணவீக்கமும் மோசமான நிலையை அடைந்துள்ள நிலையில் மக்கள் அவர் மீது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதனால், சொந்தக் கட்சியிலேயே எதிர்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அடுத்த தேர்தல் நடைபெறும் 2025 வரை அவர் பிரதமர் பதவியில் இருப்பாரா என்பதிலேயே சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

சொந்தக் கட்சியில் எதிர்ப்பு அதிகரித்தாலும் கூட கூட்டணி ஆதரவு இரு்பபதாலேயே அவரால் இப்போது அதிகாரத்தில் இருக்க முடிகிறது.

இருப்பினும், பிரதமர் பதவியில் இருந்து விலகினால் அது தோல்வியை ஒப்புக் கொண்டது போல ஆகிவிடும். அதன்பிறகு ட்ரூடோவுக்கு அரசியல் எதிர்காலமே இருக்காது என்பதால் அவர் பதவி விலக மறுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.