'கோட்டபாயவை கொல்ல ஜயசுந்தரவே சதி செய்தார்.." : முன்னாள் செயலாளர் பகீர் தகவல்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சியை கவிழ்க்க அன்றைய ஜனாதிபதியின் செயலாளர் பி.பி. ஜயசுந்தரவே பிரதான சதிகாரர் என முன்னாள் ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார தெரிவித்துள்ளார்.

ஜெனரல் எகொடவெல கோட்டாபய ராஜபக்சவை யாரையும் சந்திக்க அனுமதிக்காமல் சிறையில் அடைத்ததாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

 பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்னவும் முன்னாள் இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவும் நாடகமாடியாதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இணைய ஊடகமொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடல் இதனைத் தெரிவித்த அவர்,
 
கோட்டாபயவிற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின் ஒருபகுதியாக 150 முதல் 180 பேர் கொண்ட குழுவொன்று மிரிஹானவில் உள்ள கோட்டாபய ராஜபக்சவின் வீட்டை சுற்றி வளைத்ததாகவும் மேலும் கோட்டாபய ராஜபக்சவை கொல்ல ஆயத்தங்கள் நடந்ததாகவும், அதற்காகவே முஸ்லிம்கள் அங்கு இருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.