இஸ்ரேலிற்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையில் கடுமையான போர் நிலவி வருகின்ற நிலையில், சீனாவில் இஸ்ரேல் தூதுவர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதேவேளை, குறித்த போரினால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதுடன் கடுமையான தரைவழி தாக்குதல்களை மேற்கொள்வதற்காக காசாவை சேர்ந்த மக்கள் அனைவரையும் வெளியுறுமாறு இஸ்ரேல் எச்சரித்துள்ளது.
இந்தநிலையில், சீன தலைநகர் பீஜிங்கில், இஸ்ரேல் தூதரக அதிகாரி ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், அவரது நிலைமை சீராக உள்ளதாகவும் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் வெளியுறவு அமைச்சகம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.