இஸ்ரேல், ரஷ்ய மோதல் பகுதிகளில் பாதுகாப்பு படையினரின் அத்துமீறல் - ஐ.நா எச்சரிக்கை



இஸ்ரேல், ரஷ்ய படையினர் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள், மோதல் இடம்பெறும் பகுதிகளில் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக வெளியான தகவல் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
 
இதன்படி, குறித்த இரண்டு தரப்பினரும், பாலியல் துஷ்பிரயோகச் சம்பவங்களில், நம்பகரமான சந்தேகத்துக்குரியவர்கள் பட்டியலில் சேர்க்கப்படலாம் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார்.

 
ஐக்கிய நாடுகள் சபையால் தொடர்ந்து ஆவணப்படுத்தப்பட்ட, பல்வேறு வகையான பாலியல் வன்முறைகள் தொடர்பான தகவல்களின் அடிப்படையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
 
 
அத்துடன், சிறைகள், தடுப்பு மையங்கள் மற்றும் இராணுவத் தளங்களில் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேலியப் படைகளால் மேற்கொள்ளப்படும் மீறல்கள் குறித்தும் தாம் மிகவும் அதிருப்தியடைவதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
 
இதற்கமைய, அனைத்துப் பாலியல் வன்முறைச் செயல்களையும் உடனடியாக நிறுத்துவதை உறுதி செய்வதற்கு, அவசியமான நடவடிக்கைகளை எடுக்குமாறும் இஸ்ரேல் அரசாங்கத்தை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் வலியுறுத்தியுள்ளார்.