எகிப்து,துருக்கியிலிருந்து “உடன் வெளியேறுங்கள்” கடும் எச்சரிக்கை விடுத்துள்ள இஸ்ரேல்

ஜோர்தான் மற்றும் எகிப்தில் உள்ள தமது குடிமக்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு இஸ்ரேல் அறிவித்துள்ளதாக AFP செய்திச்சேவை தெரிவித்துள்ளது.

இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு சபை வெளியிட்ட பயண எச்சரிக்கை அறிவிப்பில்,

"எகிப்து (சினாய் உட்பட) மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளுக்கான பயண எச்சரிக்கைகளை 4 ஆம் நிலைக்கு (அதிக அச்சுறுத்தல்) உயர்த்தியுள்ளது.

இந்த நாடுகளுக்கு பயணம் செய்ய வேண்டாம் மற்றும் அங்கு தங்கியிருப்பவர்கள் கூடிய விரைவில் வெளியேறுமாறும் பரிந்துரைத்துள்ளது.

இந்த வார தொடக்கத்தில், துருக்கிக்கும் இதேபோல் எச்சரிக்கை நிலை உயர்த்தப்பட்டது அத்துடன் அங்குள்ள இஸ்ரேலிய குடிமக்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தப்பட்டனர்.